திறக்கப்படும் அய்யனின் நடை… பக்தர்கள் வருகைக்கு தடை!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைக்காக இன்று மாலை அய்யனின் நடையானது திறக்கப்படுகிறது. திறக்கப்படும் நடையானது வரும் 18ம் தேதி வரை திறந்திருக்கும். ஆனால் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளை அச்சிருத்தி வரும் கொரோனா வைரஸ் பீதியைத் தொடர்ந்து பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால்
சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது என்று கேரள அரசு போக்குவரத்து கழகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதேபோல் பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்குவதற்காக அறைகள் வழங்கப்பட மாட்டாது. அப்பம் மற்றும் அரவணை கவுண்டர்கள் செயல்படாது என்று கொரோனாவால் கடும் கிடுக்குபிடிகளை அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.