"சபரிமலையில் பெண்களுக்கு தனிவரிசை கிடையாது"தேவசம் அதிரடி..!!
கேரளா:சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்குப் பெண்களுக்கென தனி வரிசை வழங்குவது சாத்தியமில்லை என கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு படிசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படலாம் என்ற உத்தரவை அடுத்து அங்கு பெண்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தரிசனத்துக்குப் பெண்களுக்குத் தனி வரிசை அமைப்பது குறித்து ஆலோசனையில் அது சாத்தியமற்றது என கேரள அரசு நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தேவசம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்கள், குடும்பத்தினரை விட்டு பிரிந்திடக் கூடும் எனவும், அது பாதுகாப்பற்றது என்பதால் தனி வரிசை சாத்தியமில்லை என்று கூறினார்.மேலும் சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சபரிமலை வரும் பெண் பக்தர்கள் வரிசையில் 7 முதல் 8 மணி நேரம் வரை காத்திருக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 50 வயதுக்கும் மேற்பட்ட வயதுள்ள பெண்களும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும் தற்போது காத்திருந்து தரிசிப்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU