சபரிமலை: தமிழக தொழிலாளி ஒருவர் மரணம்..!

Default Image

சபரிமலையில் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இங்கு பாதுகாப்புக்காக 5 கட்டமாக 23,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை ஏராளமான துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அதில் தமிழகத்தை சார்ந்த பல துப்பரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குழுவில் மதுரை சுப்பிரமணியபுரத்தை சார்ந்த கணேசன் என்பவரும் துப்பரவு பணி செய்து வருகிறார்.கடந்த 17-ம் தேதி சன்னிதானத்தில் துப்பரவு பணி ஈடுபட்டு கொண்டு இருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது.
உடனடியாக அவரை சன்னிதானம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்குஇருந்து கோட்டயம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு சிகிக்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.இவரது உடல் ஐயப்பா சேவாசங்கம் மூலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வருடம் சபரிமலைக்கு வரும் இளம்பெண்களை திருப்பி அனுப்புவதால் எந்தவிதமான அசைப்பாவிதங்கள் நடக்கவில்லை.மேலும் கோவிலுக்கு வரும் பெண்களிடம் சான்றிதழை பார்த்து பரிசோதனை செய்த பின்புதான் அனுமதி கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடக்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்