சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று சபரிமலா கர்மசமிதி அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில்சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் பெண்களே இந்த போராட்டத்திற்கு நடத்தி வருவதும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
பதற்றமான சூழ்நிலையில் நேற்றிரவு முதல் இன்று மாலை வரை நிலக்கல், பம்பை, சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூகு அறிவித்துள்ளார். பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனவும் அவர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என போராடியவர்கள் மீது நிலக்கல், பம்பையில் நேற்று தடியடி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பாதுகாப்பு குழு சார்பில் நடத்தப்படும் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.மேலும்கேரளாவுக்கு இயக்கப்படும் தமிழக பஸ்கள் களியக்காவிளையிலும், போடிமெட்டு பகுதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் கேரளா போராட்டத்தால் முடங்கியுள்ளது.
DINASUVADU