“சபரிமலை தீர்ப்பை எற்க முடியாது”தீர்ப்பை எதித்து சீராய்வு மனு”தேவசம் போர்டு போட்டுடைத்த தகவல்..!!!
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவைரை 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நடைமுறை நெடுங்ககாலங்மாக பின்பற்றப்படுகிறது.ஆனால் உச்சநீதிமன்றம் அனைத்து பெண்களும் கோவிலுக்கு செல்ல அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் கோவிலை நிர்வகித்து வரும் தேவசம் போர்டு வாதிட்டது. 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மாதவிடாய் காலத்தில், ஆன்மிக நடைமுறைகளை அனுசரிப்பது இயலாது என்பதோடு, ஐயப்பன் பிரம்மச்சாரி என்ற அடிப்படையிலும் தேவசம் போர்டால் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த வாதங்களை எல்லாம் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்தநிலையில், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எற்க மறுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். அதேசமயம் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு வரவேற்றுள்ளது ஆனால் தேவசம் போர்டு மாறுபட்ட கருத்தை போட்டுடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU