சபரிமலை சர்ச்சை………போராட்டம்………வலுக்கும் "சுவாமியே ஐயப்போ"சரண கோஷம்………….எதிரொலி 144 தடை நீட்டிப்பு…..!!!
சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
சபரிமலை நடை திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் கொந்தளிப்பான சூழல் நிலவியதால், நிலக்கல், பம்பை, சன்னிதானம், இலவங்கல் உள்ளிட்ட பகுதிகளில்,144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை ஆந்திர பெண் செய்தியாளர் கவிதா உட்பட 2 பெண்களும் சபரிமலை நோக்கி ஜஜி ஸ்ரீஜித் தலைமையில் 150 போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்தை நெருங்கினர்.இந்த பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, சன்னிதானம் முன் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் பக்தர்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சரண கோஷங்களை முழங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் உடனே தலையிட்ட தேவசம் போர்டு சமூக ஆர்வலர் மற்றும் செய்தியாளார்கள் சபரிமலைக்கு வர அனுமதியில்லை என்று கூறினார்.இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் சுதந்திரமாக செயல்பட கேரளா அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் சபரிமலை பதினெட்டாம் படிக்கருகில் நெருங்கிய செய்தியாளார் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகிய இருவரையும் கோவிலுக்குள் நுழைக்கூடாது என்று சபரிமலை தண்டாத்திரி உட்பட பந்தள மன்னர் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதற்கிடையே ஐயப்ப பக்தர்களின் விண்ணை முட்டும் சரண கோஷங்களும் சாந்த சபரிமலை பரபரப்பாக மாறி சிறிது நேரத்தில் கலவரமாக மாறும் சூழ்நிலை உருவாகியது என்றே கூறலாம்.
இந்நிலையில் அங்கு இந்த போராட்டம் விஸ்வாரூமெடுக்கும் நிலையில் இன்றும் நீடிப்பதால் பந்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவை ஏற்று மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU