சபரிமலை செல்லும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாது! கேரள சட்டத்துறை அமைச்சர் அதிரடி!
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலிருந்து 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டதால், இந்த உச்சநீதிமன்றம் சென்றாண்டு வழங்கியிருந்த அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கலாம் என்ற தீர்ப்புதான் தற்போது அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் இந்தாண்டும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண் பக்தர்கள் வருகை இருக்கும். இதுகுறித்து கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறுகையில், சென்றாண்டே தீர்ப்பை அமல்படுத்த சில பெண் பக்தர்களை, கடும் போராட்டத்திற்கு பிறகு பலத்த பாதுகாப்போடு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பக்தர்களின் போராட்டத்திற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் கடும் வேறுபாட்டுக்கு இருப்பதால். இங்கு தீர்ப்பை அமல்படுத்த பதற்றமான சூழல் உருவானது.இந்தாண்டு சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பெண் பக்தர்களுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்கப்படாது.’ என தெரிவித்தார்.