சபரிமலை, மசூதிகளில் பெண்களை அணுமதிப்பது தொடர்பான சீராய்வு மணுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை…
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிப்பது, மசூதிகளில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மீதான விசாரணை இன்று தொடங்குகிறது.
- 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமைவு இன்று விசாரிக்கிறது.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று துவக்குகிறது. கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 60க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மணுக்கள் மீதும் கடந்த மாதம் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், மசூதியில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, பார்சி இனத்தைச் சேர்ந்த பெண்கள், வேறு இனத்தைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்தால், அவர்களுக்கு பார்சி வழிபாட்டு தலத்தில் அனுமதி மறுக்கப்படுவது உள்ளிட்ட வழக்குகளையும் இந்த அமர்வே விசாரித்து தீர்ப்பளிக்கும் என்றும் உத்தரவிட்டது. இந்த சீராய்வு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், இன்று (பிப்ரவர்3) விசாரணைக்கு வருகின்றன.