பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு முறையை எளிதாக்கிய திருவிதாங்கூர் தேவசம்போர்டு! சபரிமலை ஐயப்பன் தரிசனம்!
வருடாவருடம் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி மார்கழி தை மாதம் வரையில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பல லட்சக்கணக்கான பகதர்கள் ஸ்வாமி தரிசனத்திற்கு வருவார்கள். இந்த கூட்டத்தில் தரிசன நெரிசலை தவிர்க்க பலர் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்துவிடுவர்.
இது மூன்று கட்டங்களாக இருக்கும், பயணம், தரிசனம் மற்றும் தங்கும் அறை என பதிய வேண்டும். ஆனால், இந்த முறையை மாற்ற உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் அறிவித்தார். இவர் கூறுகையில், இனி பக்தர்கள் பயணத்திற்கு, தரிசனத்திற்கு, தங்கும் அறைக்கு என மூன்று விதமாக புக் செய்ய தேவையில்லை. மாறாக, ஒரு தடவை புக் செய்தாலே போதும்.
மேலும் இதற்க்கு முன்பு, சபரிமலைக்கு கூட்டாக செல்லும் [பகதர்கள் தங்கள் வந்த வாகனத்தை நிலகல்லில் விட்டுவிட்டு, அங்கிருந்து அரசு பேருந்தில் பம்பைக்கு செல்லும் முறை இருந்தது. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் இனி தங்கள் வாகனங்களை பம்பை வரை கொண்டு செல்லலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.