சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனு! நாளை உச்சநீதீர்மன்றம் முக்கிய தீர்ப்பு!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்க்கு மேற்பட்ட மற்றும் 50 வயதிற்கு உட்பட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்ட நெறிமுறை வருடந்தோறும் கடைபிடிக்கப்பட்டு வந்தன.
இந்த தடையை எதிர்த்து உச்சநீதிராமன்றத்தில் வழக்கு தொடர்பாட்டிருந்து. இந்த வழக்கில் சென்றாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வெளியானது. அதில், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, பல சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதி அமர்வு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.