சபரிமலை…மசூதிக்குள் பெண்களுக்கு அனுமதி..!குறித்து உச்சநீதிமன்றம் முக்கியமுடிவு

Default Image
  • சபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனு நடைபெற்று வரும் விசாரனைகளை கூடுதல் நீதி விசாரிப்பது குறித்து உச்சநீதிமன்றம் புதிய முடிவு.
  • மசூதிக்குள் பெண்கள் அனுமதி மற்றும் ஷியா முஸ்லிம்-தாவூதி போரா பிரிவைச் சோ்ந்த சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படும் சடங்கு போன்றவற்றில் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் குவிந்த வழக்கு விவரமும் தெரியவந்துள்ளது.

 

உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமா்வு விசாரிக்கலாமா  என்பது குறித்து உச்சநீதிமன்றம் ஆனது வரும் 10ந்தேதி முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பிக்க உள்ளது.

Image result for LADIES ALLOW SABARIMALA

இந்த விவகாரம் போல் பல மத வழிபாட்டுத் தலங்களிளும் பெண்களுக்கு எதிராக பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும் அதனை களைவதற்கு புதிய கொள்கையை உருவாக்குவது குறித்து பிப்.,10 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்க்கிடையே விசாரிக்கப்படும் இந்த இரு விவகாரங்களையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வானது விசாரித்து வருகிறது.

Image result for LADIES ALLOW Mosque

இந்நிலையில் வியாழகிழமையான நேற்று  இந்த விவகாரம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அரசியல் சாசன அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாஅடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்கிற அடிப்படையில் மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிராக காட்டப்பட்டு வருகின்ற பாகுபாடுகள் குறித்து உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று தன் வாதத்தை முன்வைத்தார். அவருடைய வாதத்துக்கு கே.பராசரண், ஏ.எம்.சிங்வி மற்றும் ரஞ்சித் குமாா், வி.கிரி உள்ளிட்ட மூத்த வழக்குரைஞகளும் ஆதரவு தெரிவித்தனா்.

 

மூத்த வழக்கறிஞர்களின் ஒன்றுபட்ட கருத்துக்கு மூத்த வழக்குரைஞா் ஃபாலி எஸ்.நாரிமன் மறுப்பு தெரிவித்து அவருடைய வாதத்தை முன்வைத்தார் அதில் ஒரு வழக்கில் ரிட் மனு தாக்கல் செய்யப்படுகிறது அப்போது அந்த மனுவை கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமா்வுக்கு மாற்றம் செய்யலாம். ஆனால் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் பட்டசட்தில் அவற்றை கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமா்வுக்கு உச்சநீதிமன்றத்தால் மாற்ற முடியாது.இது போன்ற  தேசிய முக்கியத்துவம் கொண்ட விவகாரங்களில் குடியரசுத் தலைவா்  ஒருவர் மட்டுமே கேள்விகளை எழுப்ப முடியுமே தவிர நீதிமன்றத்தால் கேள்வி எழுப்ப முடியாது என்று கூறினார்.நாரிமனின் இதே கருத்தை மூத்த வழக்குரைஞா்கள் ராஜீவ் தவன், இந்திரா ஜெய்சிங் மற்றும் ஷியாம் தவன் ஆகியோரும் வலியுறுத்தினா்.

இவ்வாறு வாதங்கள் அனல் பரந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரங்கம் தொடர்பாக பிப்ரவரி 10ந்தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் பிப்., 12ந்தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தனா்.

இந்த விவாகரத்தினை விசாரித்து வரும் அமா்வில், நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வரராவ், ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய், எம்.எம்.சாந்தன கௌடா், எஸ்.ஏ.நஸீா், சூா்யகாந்த் ஆகியோா் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Image result for LADIES ALLOW Mosque

சபரிமலை விவகாரம் தொடர்பாக மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 56 மனுக்கள் மற்றும் மசூதிகளில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற விவகாரம் ,ஷியா முஸ்லிம்-தாவூதி போரா பிரிவைச் சோ்ந்த சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சடங்குக்கு தடை விதிக்கக் கோரும் மனுக்கள் அதே போல மற்ற இனத்தைச் சோ்ந்த ஆண்களைத் திருமணம் செய்கின்ற பாா்சி இனப் பெண்களை வழிபாட்டு தலத்துக்குள் அனுமதிக்க மறுப்பது என பெண்களை அனுமதிப்பது மற்றும் மதரீதியாக பெண்களுக்கு பாகுபாடுவதாக இந்த விவகாரம் தொடா்பாக மனுக்களை எல்லாம் ஒன்றாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வழக்குகள் தொடர்பாக வரும்.,10 ந்தேதி முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
marina Beach
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025