Categories: இந்தியா

சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு …!பாதுகாப்பு பணியில் கமாண்டோ படையினர்,போலீசார் ..!

Published by
Venu

கேரளாவில் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து இரண்டாவது முறையாக கோவில் திறக்கப்பட உள்ளது.

கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்காமல் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை. ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3,731 பேர் கைது செய்துள்ளனர். 545 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கேரளாவில் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக திங்கள்கிழமை(இன்று) ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள சபரிமலை கோயில் நடை நாளை இரவு 10.30 மணிக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது இன்று கோவில் திறக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர், 100 பெண் போலீசார் உள்பட 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். கோவிலில் அமைதியான முறையில் தரிசனத்தை உறுதிசெய்யவும், பக்தர்களை பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Published by
Venu

Recent Posts

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி60’ ராக்கெட்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி60’ ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…

3 hours ago

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை மெரினாவில் சாலைகள் மூடல்… போக்குவரத்து மாற்றம் குறித்த முழு விவரம்!

சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…

5 hours ago

‘சீமான் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ – டிஐஜி வருண்குமார்!

சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…

6 hours ago

கைது செய்வது தான் ஜனநாயகமா? தவெகவினர் கைதுக்கு விஜய் கடும் கண்டனம்.!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…

7 hours ago

கைது செய்யப்பட்ட தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தொண்டர்கள் விடுதலை.!

சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…

7 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (31/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை :  GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…

7 hours ago