சபரிமலையில் கடந்த மாதம் 17-ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. இந்த மண்டல பூஜை வருகின்ற 27-ம் தேதி இரவு 10 மணி உடன் நடை சாத்தப்படுவதால் அத்துடன் மண்டல பூஜை முடிகிறது.
இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே மண்டல பூஜை நடைபெறும் என்பதால் நிறைவு சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதற்கு ஏற்றாற்போல தற்போது பள்ளிகளும் , கல்லுரிகளுக்கும் அரையாண்டு , புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் நேற்று முதல் சபரிமலையில் பல மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். நிலக்கல் பார்க்கிங்கில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் நாராணன்தோடு பகுதியில் போலீசார் கடும் சோதனை செய்து அனுமதிக்கின்றனர்.
பரிசோதனையின் போது பக்தர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த பிறகு அனுமதிக்கின்றனர். நேற்று அதிகாலை தொடங்கிய போக்குவரத்து நெரிசல் மாலை வரை நீடித்தது. கணமலையிலிருந்து , நிலக்கல் பார்க்கிங் வரை வாகனங்களில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்தது ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…