ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் உள்ள டாக்டர் ரெட்டி’ஸ் ஆய்வகத்தில் தயாரிக்க ஒப்பந்தம்!
ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்- V கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் டாக்டர் ரெட்டி’ஸ் ஆய்வகத்தில் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ரஷ்யா நாடு கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் சோதனையில் வெற்றிபெற்றது.
இந்தநிலையில் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்- V கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் தயாரிக்கவுள்ளது. அதன்படி, ரஷ்யாவின் ஸ்புட்னிக்- V தடுப்பூசியை டாக்டர் ரெட்டி’ஸ் ஆய்வகத்தில் தயாரிக்க, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசிக்கான பரிசோதனையை நடத்திய பிறகே இந்தியாவிற்கு மருந்தின் தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் அனுப்பும் எனவும், ஸ்புட்னிக் தடுப்பூசி பரிசோதனை வெற்றியடைந்தால் 30 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.