பிரதமர் மோடியுடன் ரஷ்ய பிரதமர் புடின் இன்று மாலை சந்திப்பு ..!
உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வந்துள்ள ரஷ்ய பிரதமர் புடின் இன்று மாலை பிரதமரை சந்திக்கவுள்ளார்.
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் அவர்கள் இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று இந்தியா வந்துள்ளார். முன்னதாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை பேசியிருந்தார். இந்த சந்திப்பின் பொழுது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மாலை ரஷ்ய பிரதமர் புடின் அவர்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் பொழுது எஸ்.300 வகை ஏவுகணை அமைப்பை ரஷ்யாவிடமிருந்து வாங்குவது மற்றும் ஏகே 203 வகை துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு உடன்பாடுகள் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.