கொரோனாவிற்கான ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுடன் இணைந்த ரஷ்யா!

தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுடன் இணைந்த ரஷ்யா.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்கை, வரும் அக்டோபர் மாதம் பொதுமக்களுக்கு சோதனை முறையில் செலுத்தி பரிசோதனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தடுப்பூசியை முதலில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களிடம் சோதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு 50 கோடி தடுப்பூசிகளை தயாரிக்கும் வகையில், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுடன் ரஷ்யா, ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில், மருந்து உற்பத்திக்கான கட்டமைப்பு வலுவாக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.