இந்தியாவிற்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசி 100 மில்லியன் டோஸ் வழங்க ரஷ்யா ஒப்பந்தம் .!

Default Image

ஐதராபாத்தை தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் ரஷ்யாவின் “ஸ்பூட்னிக் வி”  தடுப்பூசியை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி (ஆர்.டி.ஐ.எஃப்), கூட்டு சேர்ந்து சோதனை செய்து, இந்தியாவில் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, 100 மில்லியன் டோஸ் வழங்கவுள்ளது.

ஜி.வி. டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களின் இணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பிரசாத்  கூறியதாவது: “தடுப்பூசியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி உடன் இணைந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 1 மற்றும் 2  கட்ட முடிவுகள் காட்டியுள்ளன, மேலும் இந்திய கட்டுப்பாட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் 3 ஆம் கட்ட சோதனைகளை நடத்துவோம் என தெரிவித்தார்.

பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் புனேவை தளமாகக் கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்குப் பிறகு, தடுப்பூசி வழங்குவதற்கான இரண்டாவது பெரிய சர்வதேச ஒப்பந்தமாக  இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம்  கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி, ரஷ்யாவின் சுகாதார அமைச்சினால் பதிவு செய்யப்பட்டது.  தடுப்பூசி பற்றிய விரிவான தகவல்கள், மற்றும் பிற விவரங்கள் sputnikvaccine.com இல் கிடைக்கின்றன.

செப்டம்பர் 4 ஆம் தேதி, தடுப்பூசியின் கட்டம் I மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் குறித்த ஆய்வுக் கட்டுரை தி லான்செட்டில் வெளியிடப்பட்டது. இது எந்தவிதமான மோசமான விளைவுகளையும் நிரூபிக்கவில்லை மற்றும் 100% நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) ஏற்கனவே கஜகஸ்தான், பிரேசில் மற்றும் மெக்ஸிகோவுடன் தடுப்பூசி வழங்கல் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதுடன், அங்கு 300 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய கூட்டு ஒப்பந்தத்தை ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்