லஞ்சம் கேட்கும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் – பிரதமருக்கு கடிதம் எழுதிய ஒப்பந்ததாரர்…!
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சக அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி சந்தோஷ் பாட்டீல் எனும் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு காரணமான கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி ராஜினாமா செய்து கொண்டார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் கர்நாடக மாநிலத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்து வருகிறது. அதாவது கர்நாடக மாநிலத்தில் உள்ள கெப்பல் எனும் நகரை சேர்ந்த யாரிஸ்வாமி எனும் ஒப்பந்ததாரர் 15 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்ததாகவும், தன்னிடம் அதிகாரிகள் 40% லஞ்சமாக கேட்பதாகவும் குற்றம் சாட்டி பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பதற்கு தேவையான பொருளை எல்லாம் வாங்கிக் கொடுத்து, 4 லட்சம் பணமும் செலுத்தி விட்டு வேலையை தொடங்குங்கள் என கூறியதும் தங்களுக்கும் பங்கு தரவேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
தற்பொழுது அவர்களுக்கு நான் 12,000 போன் பே மூலமாகவும், 20,000 ரொக்கமாகவும் கொடுத்துள்ளேன். ஆனால் மீண்டும் மீண்டும் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள். அதாவது என்னிடம் 30% லஞ்சம் கேட்கிறார்கள் என பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.