பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 1.43 கோடி ரூபாய் பணத்தை அதை வைத்திருந்த மூன்று நபர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாக ஹரியாணா காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹாரீஷ் பர்த்வாஜ் தெரிவிக்கையில், ”ஹரியாணா மாநிலத்தில் ஹிசார் நகரத்தின் நவ்தீப் காலனியில் போலீஸார் நேற்று இரவு ஒரு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது பழைய ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாய் சிக்கின. இது தவிர இன்று புதுடெல்லி, ரோடக் ஆகிய இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.