மத்திய பிரதேசம் மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி.,யும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணியசாமி, செய்தியாளர்களை சந்தித்து தனது ரூபாய் மதிப்பு தொடர்பான கருத்தை தெரிவித்தார். அதில், அவர் கூறியதாவது, இந்தோனேஷியா நாட்டின் ரூபாய் நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது.
விநாயகர் என்பவர் தடைகளை நீக்குபவர். இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். இதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்கட்டும் என்றார். மேலும் கூறிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தில் தவறு ஒன்றும் இல்லை. காங்கிரஸ் கட்சியும், மகாத்மா காந்தியும், குடியுரிமை சட்டத்தை வலியுறுத்தியிருந்தனர். கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை கோரியிருந்தார். நாங்கள் இப்போது அதை அமல்படுத்தி உள்ளோம். ஆனால் பாக்கிஸ்தான் முஸ்லிம்களுக்கு குடியுரிமை சட்டம் எதிராக உள்ளது எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதனை ஏற்க மறுக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். இவரது இந்த கருத்து அனைத்து டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…