ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்கு நோ.. கடவுள் லடசுமியின் படத்தை அச்சிடவேண்டும்.. சு.சாமி திகைப்பூட்டும் திடீர் கருத்து..

Default Image
  • பண மதிப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி அதிரடி கருத்து.
  • குடியுரிமை சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியிடம் கேள்வி.

மத்திய பிரதேசம் மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி.,யும் பாரதிய ஜனதா கட்சியின்  மூத்த தலைவருமான சுப்பிரமணியசாமி, செய்தியாளர்களை சந்தித்து தனது ரூபாய் மதிப்பு தொடர்பான கருத்தை தெரிவித்தார். அதில், அவர் கூறியதாவது,  இந்தோனேஷியா நாட்டின் ரூபாய் நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது.

Image result for rupee note in lakshmi photo

விநாயகர் என்பவர்  தடைகளை நீக்குபவர். இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். இதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்கட்டும் என்றார். மேலும் கூறிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தில்  தவறு ஒன்றும் இல்லை. காங்கிரஸ் கட்சியும், மகாத்மா காந்தியும், குடியுரிமை சட்டத்தை வலியுறுத்தியிருந்தனர். கடந்த 2003ம் ஆண்டு  அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் நாடாளுமன்றத்தில்  இச்சட்டத்தை கோரியிருந்தார். நாங்கள் இப்போது அதை அமல்படுத்தி உள்ளோம். ஆனால் பாக்கிஸ்தான்  முஸ்லிம்களுக்கு குடியுரிமை சட்டம்  எதிராக உள்ளது எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதனை ஏற்க மறுக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். இவரது இந்த கருத்து அனைத்து டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்