RuPay டெபிட் கார்டு, BHIM UPI டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பரிசு – மத்திய அரசு
RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலம் சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு ஊக்கப்பரிசு வழங்க மத்திய மாச்சரவை ஒப்புதல்.
Rupay டெபிட் கார்டு, BHIM UPI மூலம் சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தவதற்கு ஊக்கப்பரிசு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு ஊக்கப்பரிசு வழங்க ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
ரூபே டெபிட் கார்டு மற்றும் BHIM UPI மூலம் சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தத் திட்டத்திற்கு சுமார் 1,300 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவித்தார்.
மைக்ரோசிப்கள் பற்றாக்குறை தொழில்துறை உற்பத்தியை பாதிக்கும் என்பதால் நாட்டை எலக்ட்ரானிக்ஸ் மையமாக மாற்றும் லட்சியத்துடன் குறைக்கடத்திகளுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்திற்கு (பிஎல்ஐ) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.