ரன்பீர்கர் துப்பாக்கிச்சூடு…மீண்டும் ஒரு அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொலை.!
ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ரன்பீர்கர் பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.
காவல்துறை மற்றும் இந்திய ராணுவ வீரர் கூட்டுக் குழுவாக சேர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல்களின் பேரில் ரன்பீர்கரில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்பகுதியில் மீதமுள்ள தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்கான தேடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ரன்பீர்கரில் நடந்து வரும் இந்த நடவடிக்கையின் போது ஒரு பாதுகாப்பு படைவீரர் காயமடைந்துள்ளார் என்றும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தினார். காயமடைந்த பாதுகாப்பு படைவீரர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
#RanbirgarhEncounterUpdate: Another #unidentified #terrorist killed (total 02). Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/iu4RlTassv
— Kashmir Zone Police (@KashmirPolice) July 25, 2020
இந்நிலையில், தற்போது மீண்டும் அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லபட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.