#FactCheck:மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது என்பது வதந்தி – அரசு
மாதவிடாய் சுழற்சி நேரத்தில் முன்னும் பின்னும் ஐந்து நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது என சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பி வருவதாகவும் இது தவறானது, அது உண்மை அல்ல எனவும் அரசாங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினமும் குறைந்தது மூன்று லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் நாளுக்கு நாள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியப்பட்டு நாடு முழுவதிலும் போடப்பட்டு கொண்டிருக்கிறது. வருகிற மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி குறித்து பல வதந்திகள் பரவி வரும் நிலையில், அரசாங்கம் இதற்கு பதில் அளித்து வருகிறது. மாதவிடாய் சுழற்சி நேரத்தில் முன்னும் பின்னும் பெண்கள் ஐந்து நாட்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது அது ஆபத்து என சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருவதாகவும், இது உண்மையல்ல. வதந்திகளுக்கு ஆளாகாதீர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மே 1 ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி போட வேண்டும் என அரசாங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.