ரப்பர் கிடங்கில் பயங்கர தீ விபத்து..!
டெல்லி மாளவியா நகர் ரப்பர் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய ரப்பர் பொருட்கள் தீயில் கருகின. இதனால் டெல்லி மாளவியா நகர் பெரும் புகை மண்டலம் சூழ்ந்தது.
30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சரக்கு லாரி ஒன்றில் பற்றிய தீ, அருகில் இருந்த கிடங்குக்கும் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தீ விபத்தினால் அக்கம் பக்கம் இருந்த கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.