சத்தீஸ்கரில் ஆகஸ்ட் 8 முதல் விமானப் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் அறிக்கை கட்டாயம்..!

Default Image

சத்தீஸ்கரில் ஆகஸ்ட் 8 முதல் விமானப் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் அறிக்கை கட்டாயம் என சட்டீஸ்கர் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது, ஆகஸ்ட் 8 முதல் மாநிலத்திற்கு வருகை தரும் விமானப் பயணிகள் எதிர்மறை ஆர்டி-பிசிஆர் அறிக்கையை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.

சத்தீஸ்கர் திங்களன்று புதியதாக 236 பேருக்கு கொரோனா தொற்றும்  மூன்று இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு ஷாட்டுகளையும் எடுத்த பயணிகள் 96 மணி நேரத்திற்குள்  எடுத்த கோவிட் -19 எதிர்மறையான  பரிசோதனையின் அறிக்கையை அளிக்க வேண்டும்.

சமீபத்திய உத்தரவில் கோவிட் -19 க்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்களும் அடங்குவர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  236 கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவானதை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது,இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10,02,458 ஆகவும், முந்தைய 24 மணி நேரத்தில் மூன்று உயிரிழப்பு பதிவாகியுள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மாநிலத்தில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் 1,918 ஆகவும், 13,528 பேர் வைரஸ் தொற்றுக்கு இறந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்