பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் ?
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் ஒருவர் தெரிவித்த திட்டத்தின்படியே பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பைச் செயல்படுத்தியதாகக் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் குல்பர்க்காவில் பேசிய ராகுல்காந்தி, பணமதிப்பிழப்புக்கான யோசனையை பிரதமருக்கு இந்திய ரிசர்வ் வங்கியோ, நிதியமைச்சர் அருண் ஜேட்லியோ அளிக்கவில்லை என்றும், ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் ஒருவரே அளித்ததாகவும் தெரிவித்தார்.
ஆர்எஸ்ஸ் சிந்தனையாளரின் ஆலோசனைப்படியே பண மதிப்பிழப்பைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார். நாட்டில் அனைத்து நிறுவனங்களையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்கள் யாரும் சுதந்திரமாகச் செயல்படவில்லை என்றும், ஒவ்வொரு அமைச்சகத்திலும் உள்ள ஆர்எஸ்எஸ் ஆட்களின் ஆலோசனைப்படியே அவர்கள் செயல்படுவதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.