பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறுவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுவருகிறது.இந்நிலையில் இன்று கோயில் நடைதிறக்கும் நிலையில்,கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.அதேபோல் ஏராளமானபெண் போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
ஆனால் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களையும் வர விடாமல் போராட்டகாரர்கள் தடுத்தார்கள்.
அது மட்டும் அல்லாமல் சபரிமலையில் அருகே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரின் காரை மறித்து போராட்டக்காரர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினார்கள்.இன்றும் சபரிமலை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில், சபரிமலை பிரச்னைக்கு ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் போன்ற அமைப்புகளே முக்கிய காரணம் ஆகும். பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை என்று ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…