RSS சபரிமலையை போராட்ட களமாக மாற்றியுள்ளது…கேரள முதல்வர் எச்சரிக்கை…!!
சபரிமலையை RSS இயக்கத்தினர் போராட்டக்களமாக மாற்றி வருகின்றனர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்..
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசும் தேவசம் போர்டும் முன்வந்தது.
ஆனால் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேராளாவின் சில அமைப்புகள் மறுப்பு தெரிவித்து தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டபின், கோவிலுக்குள் நுழைய முயன்ற பத்திரிகையாளர்கள் உள்பட 10 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். 5 நாட்கள் மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு பெண் கூட அனுமதிக்கப்படாமல் நடை நேற்றுடன் மூடப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவிக்கையில்…
“சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
சபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்களை கேரள அரசோ, காவல்துறையோ தடுக்கவில்லை. சபரிமலையை RSS இயக்கத்தினர் போராட்டக்களமாக்கி வருகின்றனர். விரைவில் சபரிமலையில் இருந்து சட்ட விரோதிகள் வெளியேற்றப் படுவார்கள்.கேரள வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. வாகனங்களில் சென்ற பெண் பக்தர்களை போராட்டக்காரர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். பெண்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
DINASUVADU