“பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்படும்”- ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு!
ஆந்திர மாநிலத்தில் பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும் என பல மாநில முதல்வர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்தநிலையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “தாதே” பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆந்திரவில் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பட்டுவருவதாக முதல்வர் தெரிவித்தார்.
மேலும், ஆந்திராவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால், அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.