ரூ.12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி-மீரட் நமோ பாரத் காரிடார் திட்டத்தின் 13 கி.மீ. நீளமான டெல்லி பகுதியை திறந்து வைத்தார்.
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக இன்று ரூ12,200 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தும் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பது பற்றி பார்ப்போம்..
முதலில், ரூ. 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான டெல்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் சாகிபாபாத் முதல் நியூ அசோக் நகர் இடையே பாரத் வழித்தடத்தின் 13 கிமீ தூரத்தை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, ரூ.1,200 கோடி மதிப்பிலான டெல்லி மெட்ரோ 4ஆம் கட்டத்தின் ஜனக்புரி மற்றும் கிருஷ்ணா பார்க் இடையேயான 2.8 கிமீ தூரத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
அதே சமயம், ரிதாலா முதல் குண்ட்லி வரை 26.5 கி.மீ. நீளமான டெல்லி மெட்ரோ பாச்சு-IV இன் புதிய பகுதியில் அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.6,230 கோடி ஆகும். இது டெல்லி மற்றும் ஹரியானாவின் வடமேற்கு பகுதிகளுக்கு இணைப்பை மேம்படுத்தும் என்பதால் இந்த திட்டத்திற்கு அடிக்கல் வைக்கப்படவுள்ளது.
அதைப்போல, ரோஹினியில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான புதிய கட்டிடத்தின் அடிக்கல்லையும் நாட்டி பிரதமர் மோடி அந்த திட்டத்தையும் தொடங்கி வைக்க இருக்கிறார். . இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.185 கோடி ஆகும். இது ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும்.
இந்த திட்டங்கள் அனைத்தும் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். இப்போது பள்ளி மாணவர்களை சந்தித்த நரேந்திர மோடி, சாஹிபாபாத் ஆர்டிஎஸ் நிலையத்தில் இருந்து நியூ அசோக் நகர் ஆர்டிஎஸ் நிலையத்திற்கு நமோ பாரத் ரயிலில் பயணம் செய்கிறார். அதன்பிறகு அடுத்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.