கொரோனா தொற்று பயத்தால் தற்கொலை செய்து கொண்ட ஐஆர்எஸ் அதிகாரி.!

Default Image

தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக அஞ்சி காரிலுள்ள ஒரு வகையான ஆசிட்டை அருந்தி இந்திய வருமான சேவை அதிகாரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது . மேலும் ஒரு சிலர் கொரோனா தொற்றுக்கு பயந்து தற்கொலையும் செய்துள்ளனர். அந்த வகையில் இந்திய வருவாய் சேவை(IRS) அதிகாரி ஒருவர் கொரோனா தொற்று இருப்பதாக கருதி ஆசிட் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

டெல்லியில் உள்ள துவாரகவில் இந்திய வருவாய் சேவை அதிகாரியாக பணியாற்றி வரும் 56 வயதான ஒருவர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக அஞ்சி தனது காரில் காரில் உள்ள ஆசிட் என்ற பொருளை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். இதனை குறித்து விசாரணை நடத்திய போலீஸார், அவர் தனக்கு கொரோனா இருப்பதாக அஞ்சுவதாகவும், அது தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பாதிக்க கூடாது என்ற காரணத்தினால் இறப்பதாக குறிப்பு ஒன்றை அவர் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளனர். அதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்த பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்