ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சடிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை: மத்திய அரசு…!!
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியை நிறுத்துவது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிய 2 ஆயிரம் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது. இதனிடையே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்துவது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். மேலும் 35 சதவீதத்திற்கும் அதிகமான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.