நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ20 லட்சம் கோடி- பிரதர் மோடி.!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக மோடி தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நாடு முழுவதும் 3 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் தற்போது நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இந்த திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும் இந்தியா மற்ற நாடுகளின் உதவியின்றி தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உலக நாடுகளுக்கு முக்கிய பொருட்கள் மற்றும் சேவைகளை அளிப்பதில் இந்தியா முக்கிய இடம் பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.