ரூ.9000 கோடி கடன் : 1 ரூபாய் கூட தரவில்லை – மத்திய அரசு தகவல்

- சொத்துக்களை முடக்க தடை கோரி விஜய் மல்லையா வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
- இந்த வழக்கில் 1 ரூபாய் கூட திருப்பி செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது இங்கிலாந்தில் இருந்து வருகிறார்.இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.இதற்கு இடையில் விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனது சொத்துக்களை முடக்கியதற்கு எதிராகவும்,கிங் ஃ பிஷர் நிறுவன சொத்துக்களை தவிர, மேற்கொண்டு சொத்துக்களை முடக்க தடை கோரி வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கில் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அதில், விஜய் மல்லையா கடன்களை திருப்பிச் செலுத்துவதாக கூறினாலும் 1 ரூபாய் கூட திருப்பி செலுத்தவில்லை.இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கை காரணம் காட்டி உலகில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் மல்லையா கால அவகாசம் கூறுவதோ, வழக்கில் இருந்து தப்பிக்கவோ முயற்சிக்க கூடாது என்று தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025