டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8 குறைப்பு..! டெல்லி அரசு அதிரடி..!

Default Image

டெல்லியில் 30% இருந்து 19.40% ஆக வாட் வரி குறைப்பால் நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8 குறைந்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை பின்பற்றி மாநில அரசுகளும் பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.

அந்த வகையில், டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.8 குறைத்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 30% இருந்து 19.40% ஆக வாட் வரி குறைப்பால் நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8 குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்