ராணுவத்துக்கு ரூ.70,000 கோடியில் தளவாடங்கள் – மத்திய அரசு ஒப்புதல்
ரூ.70,000 கோடி மதிப்பில் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்.
இந்திய கடற்படை, கடலோர காவற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளுக்கு பல்வேறு ஆயுத அமைப்புகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடற்படைக்காக 60 யு.எச் ரக மரைன் ஹெலிகாப்டர்களை எச்.ஏ.எல் நிறுவனத்திடம் இருந்து ரூ.32,000 கோடியில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடற்படைக்கு பிரமோஸ் ஏவுகணைகள், ராணுவத்திற்கு 307 நவீன பீரங்கிகள் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடலோர காவற்படைக்கு 9 ஏஎல்எச் துருவ் ரக ஹெலிகாப்டர்கள் வாங்கவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.