கொரோனா தடுப்பு பணிக்கு பிரதமர் மோடியின் பொது நிவாரண நிதிக்கு ரூ.7.30 கோடி வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரத்தில் கடும் சரிவை கண்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு பணிக்காகவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்குமாறு வலியுறுத்தியது. பிரதமர் மோடியும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நிதியுதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கு பல துறையை சார்ந்தவர்கள் அவர்களால் முடிந்த நிதியை அளித்து வருகிறார்கள். அந்தவகையில், தற்போது கொரோனா தடுப்பு பணிக்காக ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் சம்பளத்தை பிரதமர் மோடியின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, ரூ.7.30 கோடி ஊழியர்களிடமிருந்து மொத்த பங்களிப்பு பிரதமர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனை ஏஎன்ஐ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…