“தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பாரத் பையோடெக் நிறுவனத்திற்கு ரூ.65 கோடி”- மத்திய அரசு!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ரூ.65 கோடி வழங்கவுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் தற்பொழுது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு, கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.65 கோடி வழங்கவுள்ளது.