கடந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் பயணம் செய்தது.பின்னர் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2- ஆம் தேதி பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது.
செப்டம்பர் 7- ஆம் தேதி நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டர் அதிகாலையில் நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டது. எரிபொருள் உள்பட 1471 கிலோ எடையுள்ள விக்ரம் லேண்டருக்குள் பிரக்யான் ரோவர் இருந்தது. இந்திய நேரப்படி அதிகாலை 1.40 மணியளவில் நிலவில் விக்ரம் லேண்டர் படிப்படியாக தரையிறங்க கட்டளை கொடுக்கப்பட்டது.
ஆனால் எதிர்பாராத விதமாக நிலவிலிருந்து 2.1 கி.மீ தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர்.
இதையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோவிற்கு நாசா உதவியது. விக்ரம் லெண்டரின் பகங்கள் கண்டுபிடித்து நாசா புகைப்படங்களை வெளியிட்டது. நாசா மதுரை சார்ந்த சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் உள்ள கணினி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பணியாற்றிவந்த நிலையில் அவரது உதவியுடன் கண்டுபிடித்தது.
இந்நிலையில் இன்று இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகளை விரைவில் தொடங்கியுள்ளோம். சந்திரயான்-3 திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்.600 கோடி ரூபாயில் சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…