காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒரு விமானம் ரூ.526 கோடி…!மோடி தலைமையிலான ஆட்சியில் ஒருவிமானம் ரூ.1600 கோடி…! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று ரபேல் விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரூ.1600 கோடிக்கு வாங்க முடிவு செய்தது ஏன்?…இந்திய விமானப் படைக்கு 126 விமானங்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை 26 ஆக மாற்றியது ஏன்? …ஒட்டுமொத்த தேசமே பிரதமரின் பதிலை எதிர்பார்க்கிறது.அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்?என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.