கர்நாடக எம்.எல்.ஏ மருமகனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.51 லட்சம் வழங்கப்படும் என்று மீரட்டில் ஒரு நபர் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகந்தா சீனிவாஸ் மூர்த்தியின் மருமகன் நவீன் என்பவர் இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், கும்பல் ஒன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டையும், காவல் நிலையத்தையும் தாக்கினர். இதன் காரணமாக பெங்களூரில் ஏற்பட்ட வன்முறையில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். பின்னர் வன்முறை தொடர்பாக எம்.எல்.ஏவின் உறவினர்கள் உட்பட 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கர்நாடக எம்.எல்.ஏ மருமகனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.51 லட்சம் வழங்கப்படும் என்று மீரட்டில் ஒரு நபர் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மிரட்டல் விட்ட நபர் உத்தரபிரதேசத்தில் மீரட் மாவட்டத்தில் உள்ள ஃபலாவாடா நகரில் வசிக்கும் ஷாஜெப் ரிஸ்வி என கண்டறியப்பட்டு, அந்த நபர் பேசிய வீடியோவை கைப்பற்றி, ஐபிசி 153ஏ, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் தலைமறைவாக இருப்பதால் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரை தேடி வருகிறோம் விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…