சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ .50 ஆயிரம் கோடி கடன் -பிரதமர் மோடி..!
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மருத்துவர்களிடையே காணொலி வாயிலாக உரையாற்றினார்.
பிரபல மருத்துவரும் முன்னாள் மேற்கு வங்க முதல்வருமான பிதன் சந்திர ராய் மருத்துவ துறையில் பல்வேறு சேவைகளை செய்துள்ளதால் அவரது நினைவை அனுசரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி,இன்று பலரும் மருத்துவர்களை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில்,தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மருத்துவர்களிடையே காணொலி வாயிலாக உரையாற்றினார்.இந்த நிகழ்வை இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) ஏற்பாடு செய்தது.அந்த உரையில் அவர் கூறியதாவது:
“நமது மருத்துவர்களும் மருத்துவத் துறையை சேர்ந்தவர்களும் நாட்டிற்கும்,130 கோடி மக்களுக்கும் சேவை செய்ய இரவும் பகலும் அயராது உழைத்துள்ளனர்.இதனால்,அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா சிகிச்சையின் போது பல மருத்துவர்களே உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பல பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.இருப்பினும், அவர்கள் சிகிச்சையை நிறுத்தவில்லை.தங்கள் உயிருக்காக போராடிய நிலையிலும் மருத்துவர்கள் பல லட்சம் பேருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது பல மருத்துவர்கள் தங்கள் உயிரை இழந்தனர்.
நம் நாடு கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் போது, பல மருத்துவர்கள் மக்களுக்கு சேவை செய்யும்போது தங்கள் உயிரை இழந்துள்ளனர்.எனவே,அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்,மருத்துவர்களின் அறிவும், நிபுணத்துவமும் கொரோனாவின் கடினமான காலங்களில் நம் தேசத்தை காப்பாற்றியது.
ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு இறப்பு விகிதத்தை கவனித்தால், வளர்ந்த நாடுகளை விட நமது நாடு சிறப்பாக முன்னேறி வருகிறது. நம்மால் பலரையும் காப்பாற்ற முடிந்தது, இந்த அனைத்து பெருமையும் நமது மருத்துவர்கள், முன்கள பணியாளர்களையே சார்ந்துள்ளது.
மக்கள் அனைவருக்கும் தரமான சுகாதார சேவையை வழங்க,மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை மேலும் மேம்படுத்த ரூ .50 ஆயிரம் கோடி கடன் திட்டம் தொடங்கப்படும்,குழந்தை பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்த 22 ஆயிரம் கோடி ரூபாய் தொகையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
To further improve healthcare structure, we’re starting a Rs 50,000 crore credit guarantee scheme in areas where medical infrastructure is lacking.
We have also allotted Rs 22,000 crore to improve medical infrastructure for children.
– PM @narendramodi pic.twitter.com/QZ38cKWOu5
— BJP LIVE (@BJPLive) July 1, 2021
நாடு முழுவதும் 15 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள்,மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.குறிப்பாக மருத்துவத் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள் நடந்து வருகிறது.
மேலும்,அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எப்போதும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.