விபத்தில் சிக்கியவருக்கு உதவினால் ரூ.5000 பரிசு
விபத்தில் சிக்கியவருக்கு உதவினால் ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ஆம் தேதி கூடுகிறது என்று சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.இதனைத்தொடர்ந்து வருகின்ற 28-ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.இந்த நிலையில் இன்று 2019-20 ஆண்டிற்கான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரிக்கு ரூ.8,452 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி.அவரது உரையில்,விபத்தில் சிக்கியவருக்கு உதவினால் ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.அதாவது விபத்தில் சிக்கியவரை உடனே மருத்துவமனையில் சேர்பவர்களுக்கு ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களை சிலர் காவல்துறை அஞ்சி காப்பாற்றாமல் செல்கின்றனர். இதனிடையில் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.