ரேசன் கார்டுக்கு ரூ.5,000..உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்! நிவாரணம் அறிவித்த புதுச்சேரி முதல்வர்!
புதுச்சேரி மழை பாதிப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் தாக்கம் புதுச்சேரியில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்று புயல் புதுச்சேரியில் பகுதியில் கரையை கடந்தது தான். இதன் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தி பல இடங்களில் நீர் தேங்கியது. இதனால் வெள்ளப்பெருகும் ஏற்பட்டு புதுச்சேரி குளம் போல் காட்சியளிக்கிறது.
20 ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முற்றலும் பாதிக்கப்பட்டு அவர்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறார்கள்.
வீட்டிற்குள் தண்ணீர் தேங்கி சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி அரசு மழையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட காரணத்தால் நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 5,000 வழங்கப்படும். என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
அதைப்போல, கனமழையால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ. 40,000, கன்றுக்குட்டிகளுக்கு 20,000, ஆட்டிற்கு ரூ. 20,000, சேதமடைந்த படகுக்கு 10,000, விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ. 30,000 நிவாரணம், சேதமடைந்த குடுசை வீடுகளுக்கு ரூ. 20,000 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, புதுச்சேரியில் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்தயடுத்து அவர்களுடைய 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், புயல் காரணமாக புதுச்சேரியில் ரூ.100 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்டமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் எனவும் செய்தியாளர்களை சந்தித்தபோது முதலமைச்சர் ரங்கசாமி பேசியுள்ளார்.