காரைக்காலில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.ஏற்கனவே கஜா புயலால் அங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டது.
புதுச்சேரி, காரைக்காலில் கனமழை காரணமாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். காரைக்காலில் நடைபெறும் மீட்புப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார் நாராயணசாமி.
இந்நிலையில் ஆலோசனைக்கு பின் காரைக்காலில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.கனமழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 நிதியுதவி என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கு ரூ 187 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.புயலில் முழுமையாக சேதமடைந்த 1,500 குடிசை வீடுகளுக்கு தலா ரூ 4,100 வழங்கப்படும்.புயல் நிவாரணம் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் நேரில் விளக்கம் அளிக்க வரும் 22-ம் தேதி நேரம் கேட்கப்பட்டுள்ளது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…