#Breaking:யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட 3 மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி நிவராணம் -பிரதமர் மோடி அறிவிப்பு..!

Default Image

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா,மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ரூ.1000 கோடி நிவராணம் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கடந்த 26 ஆம் தேதியன்று ஒடிசாவின் பாலசோர் பகுதியில்,முழுவதுமாக கரையை கடந்து,மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசை குறிப்பாக ஜார்கண்ட் நோக்கி நகர்ந்தது.

இருப்பினும்,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 முதல் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன.

இதனைத் தொடர்ந்து,புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது,”அதி தீவிரமாக வீசிய புயலால் குறைந்தது ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.இந்த யாஸ் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கம் மிகவும் நிலைக்குலைந்துள்ளது”,என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில்,யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.500 கோடியும்,மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.500 கோடியும் நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேலும்,புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்