ரூ.500 கோடி மோசடி வழக்கு ! ஜாமீனில் வெளியே வந்த பின் கணவனை கொன்ற மனைவி

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சுகன்யா கணவரை கொன்றதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தை சேர்ந்த மெலங்கே சுகன்யா மற்றும் மெலங்கே ஜான் பிரபாகரன் ஆகியோரை கடந்த 2012ல் தமிழக போலீசார் ரூ. 500கோடி மோசடியில் கைது செய்யப்பட்டனர். இதில் சில மாதங்களுக்கு பின் பிரபாகரன் ஜாமீன் பெற, சுகன்யா கடந்த 2018ல் தான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் வசித்து வந்த பிரபாகரனுடன் ஜூன் 15 அன்று சுகன்யா சேர்ந்துள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இன்னொரு பெண்ணுடன் வசித்து வந்ததை அறிந்து கோபமடைந்த சுகன்யா அவரை கொன்றுள்ளார். பிரபாகரன் உடலை கண்டுபிடித்த போலீசாரிடம், சுகன்யா அவர் ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,அதனால் தூக்கத்தில் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அவரது தயக்கத்தை உணர்ந்து சந்தேகமடைந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து நடந்த விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து மல்கஜ்கிரி போலீசார் அவரை கைது செய்து சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.