தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்.!
தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் – மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையின் நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் (எஸ்.என்.சி.யு) ஏற்பட்ட தீ விபத்தால் 10 பச்சிளக் குழந்தைகள் பரிதமமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் இருந்து ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அனைவரும் பெரும் வேதனையை தந்துள்ளது.
பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமிட்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் தீ விபத்தில் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம் என இரங்கல் தெரிவித்திருந்தன. இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.