கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் – மத்திய அரசு..!
கொரோனாவால் இறந்த 101 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களவையில் இன்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்த 101 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் உதவி வழங்க ரூ. 5.05 கோடியை அரசு அங்கீகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களவையில் இன்று தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எம்.பி.ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பவார், “கொரோனாவால் இறந்த பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான சிறப்பு திட்டத்தை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதிலில் கூறினார்.
அதன்படி,தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் பத்திரிக்கையாளர் நலத்திட்டத்தின் (ஜேடபிள்யூஎஸ்) கீழ் உள்ள அளவுகோல்களை பூர்த்தி செய்யும் பத்திரிகை தகவல் பணியகத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ரூ. 5.05 கோடி நிதி உதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன் அடிப்படையில்,கொரோனா காரணமாக உயிரிழந்த பத்திரிகையாளர்களின் 101 குடும்பங்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.